திருப்பாவை பாசுரம் 15 - Thiruppavai pasuram 15 in Tamil

AstroVed’s Astrology Podcast - A podcast by AstroVed - Wednesdays

Podcast artwork

வேதம் அனைத்திற்கும்  வித்தாகும் கோதை தமிழ் என்ற பெருமை பெற்ற  திருப்பாவையின் இந்த பாசுரத்தில் பத்தாவது கோபிகையை எழுப்புகிறார்கள். இதன் சிறப்பு என்னவெனில் இது வரை பார்த்த பாசுரங்களில் வெளியில் இருந்தவர்கள் தான் பேசினார்கள். இந்த பாசுரம் உரையாடலாக அமைந்துள்ளது. இது நடுநாயகமான பாசுரம். இதில் வரும் அர்த்தம் தான் திருப்பாவையின் சாரம் ஆகும். இது முக்கியமான பாசுரம் ஆகும். இதில் வரும் “நானே தான் ஆயிடுக” என்ற ஒரு வரியை தெரிவிக்கத் தான் திருப்பாவையே இயற்றப்பட்டது. இல்லாத குற்றத்தை ஏறிட்டாலும் அதனை ஒத்துக் கொள்வதே நல்ல லட்சணம் என்று இந்த பாசுரத்தில் காட்டி இருக்கிறார்கள்.இந்த பாசுரத்தில் கூறப்படும் திவ்ய தேசம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருத்தலம் ஆகும். இந்த பாசுரத்தின் பொருளை தொடர்ந்து அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

Visit the podcast's native language site